அக்டோபர் 31 ஆம் தேதி, பாபா கா தாபாவின் உரிமையாளர், மால்வியா நகரில் வசிக்கும் காந்தா பிரசாத், யூடியூபர் கவுரவ் வாசனுக்கு எதிராக பண மோசடி புகார் அளித்தார்.
அந்த புகாரில், "டெல்லியில் உள்ள ஹனுமான் மந்திர் மால்வியா நகர் சந்தையில் பாபா கா தபா என்ற பெயரில் ஒரு ஸ்டாலை நடத்தி வருகிறேன். கடந்த அக்டோபர் மாதத்தில் கவுரவ் வாசன் என்னை அணுகி ஒரு வீடியோ பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எனது வணிகத்தை மேம்படுத்த உதவுவதாக கூறினார்.
அதன்படி, ஒரு வீடியோ படமாக்கப்பட்டது. வாசன் அந்த வீடியோவை 'ஸ்வாட் ' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் வெளியிட்டு, எனக்கு நிதி உதவி செய்ய பொதுமக்கள் பணத்தை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுள்ளார்.