தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்! - சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் பெல்குரி வனப்பகுதியில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Police recover illegal arms, ammunition in Assam's Kokrajhar
Police recover illegal arms, ammunition in Assam's Kokrajhar

By

Published : Feb 9, 2021, 5:15 PM IST

அஸ்ஸாம் மாநிலம் பெல்குரி வனப்பகுதியில் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாக செர்பங்குரி காவல் நிலையத்திற்கு இன்று (பிப். 9) அதிகாலை தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பேரில் காட்டுப் பகுதியில் காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, ​​ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், மற்றும் 7.65 மி.மீ கைத்துப்பாக்கி, 7.65 மி.மீ மேகஷின் மற்றும் ஏ.கே. ரக 29 சுற்று வெடிமருந்துகளை மீட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “மீட்கப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் குழிதோண்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க...அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாக பொய் பரப்புரை: 2 பேரிடம் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details