தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி எல்லைப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு! - தமிழ் செய்திகள்

டெல்லி: கெளசாம்பி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட டெல்லி - உத்தரப்பிரதேசம் எல்லையில் அனுமதியின்றி, வாகனங்கள் நுழைவதைக் கண்காணிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காவல் கண்காணிப்பு
காவல் கண்காணிப்பு

By

Published : Jun 4, 2020, 11:51 PM IST

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜுன் 1ஆம் தேதி அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மட்டும் டெல்லி எல்லைப் பகுதிக்குள் தடையின்றி நுழையலாம் என்றும், மற்ற வாகனங்கள் மேலும் ஒரு வாரம் எல்லைக்குள் நுழைவதற்குத் தடை நீடிப்பதாகவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் டெல்லி எல்லைப்பகுதிகளான நொய்டா, குருகிராம் பகுதிகளில் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேசமயம் ஹரியானா வழியாக டெல்லி செல்லும் எல்லைப் பகுதிகளைத் திறப்பது குறித்து டெல்லி அரசிடம் கலந்து பேசிய பின்னர் முடிவெடுக்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details