கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஆங்காங்கே சாலையில் சுற்றித்திரிகின்றனர்.
அவர்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி வெளியில் திரிகின்றனர்.
அதேபோல், மகாராஷ்டிராவில் இன்று காலை நடைபயணத்திற்காக சாலையில் திரிந்த பொதுமக்களிடம் சென்ற காவல் துறையினர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து சாலையில் தேவையின்றி திரிய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.
ஆரத்தி எடுக்கும் பெண் காவலர் பெண் காவலர் ஒருவர் ஆரத்தி எடுக்கும்போது அங்கிருந்த இளைஞர்கள் தலை குணிந்து நின்றிருந்தனர். பின்னர், ஊரடங்கு முடியும்வரை சாலையில் யாரும் தேவையின்றி திரிய வேண்டாம் என காவல் துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: நடந்து வந்த கூலித் தொழிலாளர்கள்: சொந்த ஊர் செல்ல உதவிய காவல் துறை