தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பயங்கரவாதிகளின் எல்லா திட்டங்களையும் முறியடிக்க முடியும் - காஷ்மீர் ஐஜிபி - குடியரசு தின கொண்டாட்டம்

ஸ்ரீநகர்: குடியரசு தினத்தின்போது எவ்வித தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டாலும், அதை முறியடிக்கும் ஆற்றல் தங்களிடம் உள்ளதாக காஷ்மீர் சரக காவல் துறை தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.

Inspector General of Police
Inspector General of Police

By

Published : Jan 24, 2020, 8:11 PM IST

நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாட தேசமே தயாராகிவருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீரிலுள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா ஒத்திகைகளை காஷ்மீர் சரக காவல் துறை தலைவர் விஜயகுமார் பார்வையிட்டார். இந்த ஒத்திகையில் பள்ளி குழந்தைகளும் பாதுகாப்பு படை வீரர்களும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகுமார்,"ஆக்ஸட் 15, ஜனவரி 26 போன்ற தேசத்தின் முக்கிய நாள்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இரவு நேரங்களில் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

காஷ்மீர் பகுதிகளில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கான நவீன பாதுகாப்புக் கருவிகளைக் கொண்டு மக்களை சோதனையிடுகிறோம். பயங்கரவாதிகள் எந்த மாதிரியான தாக்குதல் நடத்த திட்டமிட்டாலும், அதற்கான பதில் தாக்குதல் திட்டத்துடன் நாங்கள் தயாராகவே உள்ளோம்.

எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றுவிடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க:குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகரில் பலத்த பாதுகாப்பு!

ABOUT THE AUTHOR

...view details