புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க அரிக்கன்மேடு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரியாங்குப்பம் ஆற்றின் கரை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் பெருமளவில் இருக்காது. இதனைப் பயன்படுத்தி இரவு, அதிகாலை வேளைகளில் மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. படகு மூலமாகவும், மாட்டு வண்டிகள் மூலமாக மணல் திருட்டு நடப்பதாக புகார் வந்துள்ளது.
அரிக்கன்மேடு பகுதியில் மணல் திருட்டு - காவல் துறையினர் ஆய்வு - அரியாங்குப்பம் அரிக்கன்மேடு
புதுச்சேரி: வரலாற்று சிறப்புமிக்க அரிக்கன்மேடு பகுதியில் தாெடர் மணல் திருட்டால் தெற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் இன்று(ஆகஸ்ட் 13) தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட் 12) மினி லாரி ரகத்தைச் சேர்ந்த வண்டிகளில் மணல் திருட்டு நடந்து வருவதாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரை கைது செய்தனர். மேலும் இதுபோன்ற மணல் கொள்ளையை தடுக்கும் விதமாக தெற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் அரியாங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர்கள் தனச்செல்வம், புருஷோத்தமன் ஆகியோர் ஆய்வு செய்து இந்த மணல் கொள்ளையை தடுக்கும் விதமாக ஜேசிபி எந்திரம் மூலம் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது உதவி ஆய்வாளர் ராஜன், காவலர்கள் உடனிருந்தனர்.