தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய ஹைதராபாத் காவல் துறை! - POLICE HELPS PREGNANT WOMEN TO HOSPITAL

ஹைதராபாத்: பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

POLICE HELPS PREGNANT WOMEN TO HOSPITAL IN HYDERABAD
POLICE HELPS PREGNANT WOMEN TO HOSPITAL IN HYDERABAD

By

Published : Apr 21, 2020, 1:10 PM IST

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு பொது போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் கவுஸ் நகரில் அரிஃபா பேகம் என்ற கர்ப்பிணி பிரசவ வலியால் துடிப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு மலாக்பேட்டை பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காவல் துறையினர் உரிய நேரத்தில் கர்ப்பிணையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததால் சுகப் பிரசவத்தில் அரிஃபா பேகத்திற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்தார்.

கர்ப்பிணிக்கு உதவிய காவல் துறை

அரிஃபா பேகத்தின் குடும்பத்தினர் உரிய நேரத்தில் உதவிய காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நடந்து வந்த கூலித் தொழிலாளர்கள்: சொந்த ஊர் செல்ல உதவிய காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details