மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் உருவப்படத்தை எரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமித்ஷா உருவ பொம்மையை எரித்த மாணவர்களுக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட முக்கியக் கட்சி நிர்வாகிகள் பல்கலைக்கழகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்தில் நுழைந்த பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் திடீரென்று ஆவேசமடைந்த கட்சித் தொண்டர்கள் பல்கலைக்கழகத்தின் நுழைவுவாயிலைத் திறந்துகொண்டு உள்ளே சென்று பரபரப்பை ஏற்படுத்தினர். உடனடியாக அங்கே வந்த காவல் துறையினர் தொண்டர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். அப்போது காவல் துறைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில், அமித் ஷாவின் உருவப்படத்தை எரித்த மாணவர்களை உடனடியாகக் கைது செய்யவில்லை என்றும் கோரிக்கைவைத்து தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களைச் சமாதானப்படுத்திய காவல் துறையினர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 'பாஜக செய்ததிலேயே குடியுரிமை மசோதாதான் மிகப்பெரிய கெடுதல்'