கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் வர்க்கலா அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் ’ஸ்கூல் யூத் ஃபெஸ்டிவல்’ என்ற திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இதனால் கோபமடைந்த பள்ளி முதல்வர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, வர்க்கலா பகுதியின் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 12ஆம் வகுப்பு படிக்கும் சுதீஸ் என்ற மாணவன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் வரும் நவ.7ஆம் தேதி நடக்கவுள்ள தேசிய அளவிலான கபடிப் போட்டியில் சுதீஷ் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.