மனித உடல் உறுப்புகளை விற்பனை செய்து பணம் பறிக்கும் மோசடி கும்பலில் இருவரை கைது செய்துள்ளதாக தெலங்கானா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களை கடத்தும் மோசடி கும்பல் - இருவர் கைது - உடல் சதை வியாபாரம்
ஹைதராபாத்: மனித உடல் பாகங்களை விற்பனை செய்ய மனிதர்களை கடத்தும் மோசடி கும்பலில் இருவரை தெலங்கானா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
![மனிதர்களை கடத்தும் மோசடி கும்பல் - இருவர் கைது Human trafficking rocket](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:28:09:1595415489-whatsapp-image-2020-07-22-at-120255-am-2207newsroom-1595392462-1060.jpeg)
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “மல்கஜக்கிரி காவல் நிலைய பகுதிக்குள், மோசடி கும்பலை ஒருங்கிணைக்கும் இருவர் சைபராபாத் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேசமயம் அங்கிருந்த இரண்டு மேற்கு வங்க பெண்களை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரது பெயரும் சிவா, சின்னா என்றும், இவர்கள் தெலங்கானா-வை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த இரு பெண்களையும் நல்ல கமிஷன் தருவதாகக் கூறி அவர்களை இங்கே அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் இவர்கள் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களாக ரகசியமாக இத்தொழிலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது என கூறினர்.