ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் நடைபெற்ற 39ஆவது கவிஞர்களின் நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். அப்போது பேசுகையில்,’ பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் கவிதை வாசிப்பு, எழுத்து இரண்டும் கட்டாயப் பாடமாக மாற்றப்பட வேண்டும். இந்தியாவில் மருத்துவர்கள், பொறியாளர்களைப் போல் எழுத்தாளர்கள், பாடகர்கள், ஓவியர்களையும் உருவாக்க வேண்டும்.
சமூக மாற்றத்திற்கு கவிதை மிகப்பெரும் கருவியாக உள்ளது. புதிய சிந்தனைகள், குரல்கள், விவாதங்கள் உள்ளிட்டவற்றை படைப்பாளர்கள் தான் எடுத்துச்செல்ல முடியும். புதிய சிந்தனைகளால் மட்டுமே ஒரு சமூகம் பண்பட்ட சமூகமாக மாற்றமடையும். புதிய சிந்தனைகள் கவிஞர்களாலும், கவிதைகளாலுமே உருவாகிறது.