தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காவல் உதவி ஆய்வாளர் மீது போஸ்கோ வழக்கு.! - Pocso case against kerala si

திருவனந்தபுரம்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் மீது போஸ்கோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Pocso case registered against Sub Inspector for rape attempt
Pocso case registered against Sub Inspector for rape attempt

By

Published : Nov 29, 2019, 8:46 PM IST

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் உதவி ஆய்வாளராக சஞ்சீவ் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள காவலர்கள் குடியிருப்பு அருகில் வசித்து வருகிறார்.
அந்த காவலர் குடியிருப்பில் 8 வயது சிறுமி ஒருவர், அவரது தாயுடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி தனியாக இருக்கும் நேரம் பார்த்து, அச்சிறுமியிடம் காவல் உதவி ஆய்வாளர் சஞ்சீவ் குமார் பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

அவரிடம் இருந்து தப்பித்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் அழுதுக் கொண்டே தெரிவித்தது. இதை கேட்ட அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் நடந்த சம்பவம் குறித்து பெரூர்கூடா காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், காவல் உதவி ஆய்வாளர் சஞ்சீவ் குமார் மீது போஸ்கோ (பாலியல் கொடுமைகளிலிருந்து குழந்தைகளை தடுத்தல்) சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் சஞ்சீவ் குமார் தலைமறைவாகி விட்டார். அவரை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவல் உதவி ஆய்வாளரே சட்டத்துக்கு புறம்பாக சமுகத்திற்கு தீங்கிழைவிக்கும் செயலில் இறங்கியது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்கக் குழு - கேரள அரசு

ABOUT THE AUTHOR

...view details