பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்ந்த நிதி மோசடி தொடர்பான வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் ரூ 14,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி செய்துள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது. மொத்தம் ரூ. 4,886 கோடி அளவுக்கு வங்கிகளில் 143 கடன் உத்திரவாத கடிதங்கள் (எல்.ஓ.யூ) , 224 வெளிநாட்டு கடன் ஒப்புதல் கடிதங்கள் மூலம் இந்த மோசடி நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது.
இந்த மோசடியில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரான உஷா அனந்த சுப்ரமணியன், பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநர்களான கே.வி. பிரம்மாஜி ராவ், சஞ்ஜீவ் சரண், பொது மேலாளர் நேகல் அகாத் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
பிரதான குற்றவாளியாக சிபிஐ குறிப்பிட்டுள்ள மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி குழுமத்தின் துணைத் தலைவராக இருந்துவந்த விபுல் சிட்டாலியாவை கடந்த 2018 மார்ச் மாதம் மத்திய புலனாய்வுப் பிரிவு கைதுசெய்தது.