தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'3 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்த DHFL நிறுவனம்' பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்! - பஞ்சாப் நேஷனல் வங்கி

மும்பை: பிரபல நிதி நிறுவனமான டிஹெச்எப்எல் ரூபாய் 3 ஆயிரம் கோடியை போலி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கி மோசடி செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது‌.

punjab
punjab

By

Published : Jul 10, 2020, 3:15 PM IST

பிரபல நிதி நிறுவனமான திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL), பொதுதுறை வங்கிகளில் சுமார் 97 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி போலி நிறுவனங்களின் பெயரில் கடன் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு ஏழுந்தது.

இந்நிலையில், DHFL நிறுவனம் ரூ. 3 ஆயிரம் கோடி பணம் மோசடி செய்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, DHFL நிறுவனம் மீது பல வங்கிகளிலிருந்து பணம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details