உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்கள் ஊரடங்கு குறித்து தொடர்ச்சியான ட்வீட்கள் வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் ஊரடங்கு நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர், தொற்றுநோய்களுக்கு மத்தியில் நாட்டைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மக்கள் ஓரிடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “ இந்தியா கரோனாவை எதிர்த்துப் போராடுவதால், கோவிட் -19ஐ தோற்கடிப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். மார்ச் 22 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் ஊக்குவிக்கவும். இது நமது இயக்கம், நாட்டை ஒன்றாக வெல்வோம்” என்று கூறியிருந்தார்.
மற்றொரு ட்வீட்டில், “நாட்டைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தொடர்ந்து பணியாற்றி வரும் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கைதட்டி ஆதரவையும் நன்றியையும் தெரிவிக்க யாரும் மறந்துவிடக்கூடாது.