74ஆவது ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நியூயார்க்கில் வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 28ஆம் தேதி உரையாற்ற உள்ளார்.
74ஆவது ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள மோடி! - 74th UN General Assembly Session
நியூயார்க்: 74ஆவது ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
PM Modi
ஏற்கனவே 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் மோடி பேசிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக உரையாற்ற உள்ளார்.
நியூயார்க்கில் தொடங்கும் இந்தக் கூட்டமானது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், வெளியுறவுத் துறை அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் நிலையில், பல்வேறு முக்கிய விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.