புதிதாக ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடினார். அதில் பேசுகையில், ''வேலைப்பளுவும், அழுத்தமும் அனைவருக்கும் உண்டு. ஏன் விவசாயிகளுக்கு உண்டு. அது வாழ்க்கையின் ஒரு பகுதி. அது ஒன்றும் நிர்வகிக்க முடியாதது அல்ல.
நமது தேவையையும், பொறுப்புகளையும் சரியாக புரிந்து வைத்திருந்தோம் என்றால் எளிதாக நிர்வகிக்கலாம். காவல் துறை பணிகளில், எதிர்பாராத ஒரு விஷயத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதனோடு சேர்த்து தொடர் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். நீங்கள் கடமைக்காக செல்லும்போது, இதுபோன்ற தலைப்புகளில் பேசும் மனிதர்களையோ, ஆசிரியர்களையோ சந்தியுங்கள். அது மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்யும். மேலும் யோகா, பிராணாயாம போன்ற பயிற்சிகளை விருப்பத்துடன் மேற்கொண்டால், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.