தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கலங்கரை விளக்கம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்! - தனி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

திரிபுரா, ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அமைய உள்ள கலங்கரை விளக்கம் திட்டங்களுக்கு நாளை (ஜனவரி 1) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

லைட் ஹவுஸ் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்!
லைட் ஹவுஸ் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்!

By

Published : Dec 30, 2020, 7:55 AM IST

டெல்லி:திரிபுரா, ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு ஆகிய இடங்களில் 2021 ஜனவரி 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலங்கரை விளக்கம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "2021 ஜனவரி 1ஆம் தேதி திரிபுரா, ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாட்டில் கலங்கரை விளக்கம் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

அப்போது #HousingForAll திட்டம் புதிய உத்வேகம் பெறும். ஜி.ஹெச்.டி.சி. இந்தியா முயற்சியின் ஒரு பகுதியாக, எல்.ஹெச்.பி. கட்டுமான தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பி.எம்.ஏ.வி. (யு) மற்றும் ஆஷா-இந்தியா விருதுகளும் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கோவாக்சின் தடுப்பு மருந்தால் உருமாறிய கரோனாவுக்கு எதிராகச் செயலாற்ற முடியும்'

ABOUT THE AUTHOR

...view details