வங்கக்கடலில் உருவாகியுள்ள ’ஆம்பன் புயல்’ அதிதீவிரப் புயலாக உருவெடுத்துள்ளதால் மேற்குவங்கம், ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தீவிரப் புயலான ஆம்பன், வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து, வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து 13 கி.மீ. வேகத்தில் சென்றுவருகிறது. இது மேலும் தீவிரமடைந்து, அதி தீவிரப்புயலாக உருவெடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிதீவிரப் புயலாக மாறும் ஆம்பன், மேற்குவங்கம் - வங்கதேசம் கடற்கரைகளில் மே 20ஆம் தேதி பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும், மேற்கு வங்கம், வங்கதேசம் கடற்கரைகளை மிகக் கடுமையாகத் தாக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.