கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் பேசுகையில், ''சீனாவின் ஊடுருவலை பிரதமர் மோடி வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். அவர் வெளிப்படையாகப் பேசினால், இந்த விவகாரத்தைல் அவருக்கு ஆதரவாக இருப்போம்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் யாரும் ஊடுருவவில்லை, இந்திய எல்லைகளை யாரும் ஆக்கிரமிக்கவில்ல என்று அவர் கூறினார். இதனைத்தான் சீனாவும் கூறிவருகிறது. ஆனால் சாட்டிலைட் புகைப்படங்கள் அப்படி இல்லை.