சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட்-19 வைரஸ்தொற்றினால் இந்தியாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவரை எவ்வாறு வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கலாம் என்ற அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதற்காக இவற்றை பின்பற்றவும்....!
- வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் நன்கு காற்றோட்டமான ஒற்றை அறையில் தங்க வேண்டும்.
- வாய்ப்பிருந்தால் தனிப்பட்ட கழிப்பறையை உபயோகிக்கவும்.
- மற்றொரு குடும்ப உறுப்பினர் ஒரே அறையில் தங்க வேண்டியிருந்தால், இருவருக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை பராமரிப்பது நல்லது.
- தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோர்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும்.
- சோப்பு கொண்டு கைகளை கழுவ வேண்டும்
- பாதிக்கப்பட்டவர்கள் உபயோகிக்கும் பாத்திரங்களை உபயோகிப்பதை தவிர்க்கவும்.
- எல்லா நேரத்திலும் அறுவை சிகிச்சை முகமூடியை அணிய வேண்டும் முகமூடியை ஆறு முதல் எட்டு மணி நேரத்திற்கு மாற்றி அணிய வேணும்” என அறிவுறுத்தியுள்ளது.