ஒவ்வொறு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடம் கலந்துரையாடுவது வழக்கம். அந்தவகையில், நேற்று மக்களிடம் பேசிய அவர், தன்னிடம் ஒருவர் ஊரடங்கு காலத்தில் உடலை சீராக வைத்துக்கொள்வது குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், தான் யோகா ஆசிரியரோ, உடற்பயிற்சி நிபுணரோ அல்ல. பல வருடங்களாக தான் யோகா பயிற்சிகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.