தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்வநிதி திட்டம் மூலம் சாலையோர வியாபாரிகள் தன்னிறைவு பெற்றுள்ளனர் - மோடி - பிரதமர் மோடி

டெல்லி : சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் மூலம் அவர்கள் தன்னிறைவு பெற்றுள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி

By

Published : Oct 27, 2020, 2:42 PM IST

Updated : Oct 27, 2020, 2:54 PM IST

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் வகையில் ’ஸ்வநிதி திட்டம்’ அமல்படுத்தப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் இதன் மூலம் பயனடைந்தவர்களிடையே உரையாற்றிய மோடி, இத்திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகள் தன்னிறைவு பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசியவர் அவர், "ஸ்வநிதி திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களிடையே பேசும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தெரியவந்தது. முன்பெல்லாம், வங்கியில் கடன் பெறுவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் தற்போது அவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கிறது.

குறைந்த கல்வியறிவை உடைய அவர்கள், தொழில்நுட்பத்தை நம்பிக்கையுடன் கற்கிறார்கள். வர்த்தகத்தை பெரிய அளவில் செய்ய முயற்சி செய்கிறார்கள். நம் நாட்டின் பலமாக உள்ள அவர்கள் தான், வளர்ச்சிப் பாதையில் நாட்டை அழைத்துச் செல்வார்கள்.

சுயசார்பு இந்தியக் கொள்கைக்கு இது ஒரு முக்கியமான நாள். ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ’கரிப் கல்யாண் திட்டம்’ வகுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் நலனுக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

Last Updated : Oct 27, 2020, 2:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details