சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 1947ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். அவரது 56ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. உலகத் தரம் வாய்ந்த ஐஐடிகளை நிறுவியதில் நேருவின் பங்கு அளப்பரியது.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிச கொள்கைகளை கடைசி வரை பின்பற்றியவர் நேரு. இவரின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.