தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திலகரின் துணிச்சல் அனைவருக்கும் உத்வேகம் தருகிறது - மோடி புகழாரம் - திலகரின் துணிச்சல் அனைவருக்கும் உத்வேகம் தருகிறது

பாலகங்காதர திலகரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரின் துணிச்சல் தொடர்ந்து உத்வேகம் தருகிறது என புகழாரம் சூட்டியுள்ளார்.

மோடி
மோடி

By

Published : Aug 1, 2020, 3:44 PM IST

Updated : Aug 1, 2020, 5:38 PM IST

சுதந்திர போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் பாலகங்காதர திலகர். அப்போது, காங்கிரஸ் கட்சி மிதவாதி, பயங்கரவாதி என இரு குழுக்களாக பிரிந்தது. கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலான குழு, சுதந்திரத்தை அமைதியான அகிம்சை வழியில் அடைய வேண்டும் எனவும் பாலகங்காதர திலகர் தலைமையிலான குழு ஆயுதங்கள் ஏந்திய தீவிரவாத வழியில் அடைய வேண்டும் எனவும் செயல்பட்டனர்.

சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என முழங்கி ஆயுத கிளர்ச்சியாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த திலகரின் 100ஆவது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 1) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

அதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், திலகரின் துணிச்சல் தொடர்ந்து உத்வேகம் தருகிறது என புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திலகரின் 100ஆவது நினைவு தினத்தையொட்டி இந்தியா அவருக்கு தலைவணங்குகிறது. அவரின் அறிவாற்றல், துணிச்சல், நீதியின் பால் கொண்ட பற்று, சுதந்திரத்தின் மேல் கொண்ட கருத்து ஆகியவை நமக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஹேக்கத்தான் போட்டி: மாணவர்களிடையே உரையாற்றவுள்ள மோடி

Last Updated : Aug 1, 2020, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details