தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மன் கி பாத்' உரையில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்திய மோடி - முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் மோடி தெரிவித்துள்ளார்.

modi file photo

By

Published : Oct 27, 2019, 6:40 PM IST

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் மக்களிடம் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி இன்று 58ஆவது முறையாக அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ''அக்டோபர் 31ஆம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொலை செய்யபட்ட நாளாகும் அதனை முன்னிட்டு என்னுடைய மரியாதையை இன்று அவருக்கு செலுத்துகிறேன்'' என்றார். மேலும் இந்திரா காந்தியின் மரணம் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சிகரமான ஒரு தருணம் என்று குறிப்பிட்டார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அவரது வீட்டில் பாதுகாப்பு காவலர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: ’நமது பண்டிகைகளை பிரபலப்படுத்துங்கள்’ - மன் கி பாத் உரையில் மோடி

ABOUT THE AUTHOR

...view details