தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

70ஆவது மன் கி பாத்: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார் - PM Modi in Mann Ki Baat

டெல்லி: 70ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.25) உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Oct 25, 2020, 7:38 AM IST

பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில், இன்று (அக்.25) காலை 11 மணிக்கு மக்களுடன் உரையாற்றுகிறார்.

முன்னதாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மான் கி பாத் நிகழ்ச்சி, சிறந்த குடிமக்களின் எழுச்சியூட்டும் பயணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சமூக மாற்றத்தை ஆற்றும் கருப்பொருள்களைப் பற்றி விவாதிக்கவும் வாய்ப்பை வழங்குகிறது. உங்கள் யோசனைகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் செய்தியை பதிவு செய்யுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க:ரூ.4,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடக்கி வைத்த பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details