சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் நாளை (அக்டோபர் 31) தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் மாநிலத்தில் சரோவர் அணையில் அமைக்கப்பட்டு உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.
குஜராத் வந்த நரேந்திர மோடி, தாய் ஹீராபென்னுடன் சந்திப்பு! - தாய் ஹீராபென்னுடன் சந்திப்பு
அகமதாபாத்: படேல் சிலைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி இன்று காந்திநகரில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்று தாயார் ஹீராபென்னை சந்தித்துப் பேசினார்.
தாய் ஹீராபென்னுடன் மோடி சந்திப்பு
இந்நிலையில், இன்று இரவு குஜராத் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் விஜய் ரூபானி உள்பட பலர் வரவேற்றனர்.
குஜராத் வந்த பிரதமர் மோடி, தனது சொந்த ஊரான ராய்சன் கிராமத்திற்குச் சென்று சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசித்துவரும் தனது தாயார் ஹீராபென்னை நேரில் சந்தித்துப் பேசினார்.