'கூகுள் ஃபார் இந்தியா' என்ற நிகழ்வின் ஆறாவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ளது. டிஜிட்டல்மயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்துவரும் இந்தியாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கித்தரும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக முதல்முறையாக வீடியோ கான்பரன்சிங் மூலம் இது நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார்.
பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், இந்த உரையாடல் பலன் தரும் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று காலை, சுந்தர் பிச்சையுடன் பலன் தரும் விதமான உரையாடலை மேற்கொண்டேன். இந்திய விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர் ஆகியோரின் வாழ்க்கையை தொழில்நுட்பத்தின் உதவியோடு மாற்றியமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினோம்.