தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'காஷ்மீர் இந்தியாவின் மகுடம்' - பிரதமர் நரேந்திர மோடி!

மும்பை: காஷ்மீருக்கு மீண்டும் சிறப்புத் தகுதியை அளிப்போம் என்று தேர்தல் அறிக்கை வெளியிடமுடியுமா என பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.

Pm narendra Modi election campaign at maharashtra

By

Published : Oct 13, 2019, 7:29 PM IST

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டுள்ளார்.

இதில் பேசிய நரேந்திர மோடி, பாஜக தலைமையிலான கூட்டணி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பட்னாவிஸ் ஊழலற்ற ஆட்சியை அளித்துள்ளதாகவும், மக்களின் நலனுக்காக பாஜக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவுள்ளது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், காஷ்மீர் விவகாரத்தில் அண்டை நாட்டினர் போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றனர். நீக்கப்பட்டுள்ள காஷ்மீர் சிறப்புத் தகுதியை மீட்டுத் தருவோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட முடியுமா எனவும் பிரதமர் மோடி கேள்வியெழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் காஷ்மீர் விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன எனவும், ஜம்மு காஷ்மீர் வெறும் நிலம் மட்டுமல்ல; இந்தியாவின் மகுடம் எனக் கூறியுள்ளார். காஷ்மீர் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் அவர் உறுதியளித்தார்.

காஷ்மீர் விவகாரம் மட்டுமின்றி, முத்தலாக் விவகாரத்திலும் மோடி, எதிர்க் கட்சிகளுக்குச் சவால் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: பாரதிய ஜனதாவுக்கு ராஜ் தாக்கரே அடுக்கடுக்கான கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details