தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கரோனா கண்டறிதல் சோதனையை அதிகரிக்க பிரதமர் வேகமாகச் செயல்பட வேண்டும்'

டெல்லி: கரோனா கண்டறிதல் சோதனையை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி வேகமாகச் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

pm-must-act-fast-and-clear-bottlenecks-to-scale-up-covid-19-testing-rahul
pm-must-act-fast-and-clear-bottlenecks-to-scale-up-covid-19-testing-rahul

By

Published : Apr 26, 2020, 4:30 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை இந்தியாவில் 26 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 825 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனாவை நாடு வெல்ல வேண்டுமென்றால் மக்களுக்குச் செய்யப்படும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், ''கரோனா வைரசிலிருந்து வேகமாக வெளியே வர நாம் செய்ய வேண்டிய ஒரே வழி கரோனா கண்டறிதல் சோதனையை அதிகரிப்பது மட்டுமே.

மத்திய அரசு நாடு முழுவதும் ஒரு நாளில் 40 ஆயிரம் பரிசோதனைகளைத்தான் செய்துவருகிறது. அதனை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும்.

கையிருப்பில் உள்ள கரோனா கண்டறிதல் சோதனைக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்குப் பிரதமர் நரேந்திர மோடி வேகமாகவும், தெளிவாகவும் செயல்பட வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

கரோனா வைரசிலிருந்து விடுபட பரிசோதனைகளை உயர்த்துவது மட்டுமே ஒரே வழி எனக் காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலே பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா: சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துங்கள்; மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details