தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடியின் தனி செயலருக்கு உலக வங்கியில் பணி!

பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அலுவலர் ராஜீவ் டாப்னோ உலக வங்கி நிர்வாக இயக்குநரின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Modi personal secretary
Modi personal secretary

By

Published : Jun 5, 2020, 2:42 PM IST

டெல்லி: 1996 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அலுவலர் ராஜீவ் டாப்னோ உலக வங்கி நிர்வாக இயக்குநரின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டோப்னோவின் புதிய பணியை பிரதமர் மோடி தலைமையிலான நியமனக் குழு அனுமதித்தது. இந்த குழு வெளிநாட்டு பணிகளுக்காக பிற ஐந்து அலுவலர்களின் பெயர்களையும் பரிந்துரைத்துள்ளது.

குஜராத் பேட்ஜ் இந்திய நிர்வாக சேவை அலுவலரான டோப்னோ, 2009ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கியபோது, பிரதமர் அலுவலகத்தில் துணை செயலராக சேர்ந்தார். யுபிஏ -2 அரசாங்கத்தில் பி.எம்.ஓவில் தொலைத் தொடர்பு மற்றும் துறைமுகங்கள் போன்ற முக்கிய இலாகாக்களை அவர் கையாண்டார்.

குஜராத் கேடர் அலுவலரை தனது தனிப்பட்ட செயலராக நியமித்த பிரதமர் மோடி, 2014 ஆம் ஆண்டில் டாப்னோவை தனது தனிப்பட்ட செயலராக நியமித்துக் கொண்டார்.

பிரதமருக்கு இரண்டு தனிப்பட்ட செயலர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி, இரண்டாவது விவேக் குமார் எனும் இந்திய வெளியுறவு சேவை அலுவலர்.

மேலும் ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பின் தூதராகவும், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாகவும் 1999 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அலுவலர் பிரஜேந்திர நவ்னிட் நியமிக்கப்பட்டதையும் ஏ.சி.சி அனுமதித்துள்ளது.

1993 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அலுவலரான ரவி கோட்டா, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும், மத்திய செயலக சேவையில் உள்ள லெகான் தாக்கர், சீனாவில் உள்ள தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும், ஜெனீவாவின் உலக வணிக அமைப்பின் இந்திய நிரந்தர மிஷனில் ஆலோசகராக இந்திய ரயில் போக்குவரத்து போக்குவரத்து சேவை அலுவளரான அன்வர் உசேன் ஷேக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details