இது குறித்து அவர், 'பயங்கரவாதம் வளர பாகிஸ்தான் நிதி உதவி செய்கிறது. இந்தியா பயங்கரவாதமற்ற சமூகத்தின் பின்னால் நிற்க, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக உலக அளவில் மாநாடு நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இம்ரான்கான் முன்பு மோடியின் பாகிஸ்தான் வெறுப்பு பேச்சு! - ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு
பிஷ்கெக்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்த்தெடுக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் பேசியுள்ளார்.
![இம்ரான்கான் முன்பு மோடியின் பாகிஸ்தான் வெறுப்பு பேச்சு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3556960-70-3556960-1560499309069.jpg)
Modi and imran
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொண்டார். இம்ரான்கான் பிரதமராக பதவியேற்ற பின்பு பிரதமர் மோடியை சந்திப்பது இதுவே முதல்முறை. நேரில் சந்தித்தபோதும் இம்ரான்கானும் மோடியும் பேசிக்கொள்ளவில்லை.