தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் ரத்து - PM Modi's Dhaka trip cancelled

டெல்லி: கொரோனா தொற்று அச்சுறுத்தலால் பிரதமர் மோடியின் வங்கதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Modi
Modi

By

Published : Mar 9, 2020, 6:22 PM IST

கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, தெற்காசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் பிறந்த நாள் விழாவுக்காக மோடி மார்ச் 17ஆம் தேதி பிரதமர் மோடி வங்கதேசம் செல்லவிருந்தார்.

வங்கதேசத்தில், பாதிக்கப்பட்ட மூவரின் வயதும் 20 முதல் 35 வரை இருக்கலாம் எனவும் மூன்றாவது நபர் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனா, இத்தாலி, தென் கொரியா, சிங்கப்பூர், ஈரான், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வங்கதேசத்திற்கு திரும்பும் மக்களை 14 நாள்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நாட்டிலிருந்து திரும்பும் பயணிகள் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கொரோனா தொற்றால் இதுவரை 100 நாடுகளில் 1,07,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாரார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஷோபியன் என்கவுன்டரில் 2 பிரிவினைவாதிகள் உயிரிழப்பு'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details