2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தது. பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "கடந்த ஓராண்டில் பல்வேறு சவால்களை நாடு சந்தித்தாலும், அதைக் கடந்து நாம் பல சாதனைகளையும் மேற்கொண்டுள்ளோம். நான் இரவு பகலாக உழைக்கும் நிலையில், என்னிடமும் குறைகள் இருக்கலாம். அதேவேளை, என்னைவிட உங்களையும் உங்கள் பலத்தையும் நான் நம்புகிறேன்.
கரோனாவை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் விவகாரத்தில் இந்தியா உலகையை ஆச்சரியப்படவைத்துள்ளது. நமது தொழிலாளர்கள் தொடங்கி பலரும் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை. ஒருங்கிணைந்த வகையில் பாடுபட்டு அவர்களின் துயரைத் துடைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.