காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்வீட்டரில், “பிரதமர் சோதித்து பார்க்கிறார். கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடுமையான சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகயை அறிவிப்பது அவசியம்.
அந்த வகையில் பிரதமருக்கு வேறு வழியில்லை. அவர் மீண்டும் மக்கள் முன்னிலையில் உரையாற்றுவார். அப்போது கடுமையான சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கையை அறிவிப்பது தவிர வேறு வழியில்லை.” என கூறியுள்ளார்.
எனினும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள “மக்கள் ஊடரங்கு” வேண்டுகோளுக்கு ப.சிதம்பரம் ஆதரவளித்தார். பிரதமரின் இந்த முன்முயற்சியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.