ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி 'மான் கி பாத்' (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றுவார். அந்தவகையில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்.
உலகளவில் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் அதனைக் கட்டுப்படுத்தம்விதமாக, பிரதமர் நரேந்திர மோடி 21 நாள்களுக்கு மக்கள் கூடுவதைத் தவிர்க்கும்வகையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.
மேலும், ஊரடங்கு உத்தரவு காலங்களில் ஏற்படும் பொருளாதார இடர்பாடுகளை மக்கள் எதிர்கொள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸும் சில அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் மனதில் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடம் உரையாற்றவுள்ளார்.
இதையும் படிங்க:'வைரஸ் ரோபோக்களை பாதிக்காது'- கரோனாவை வென்ற சீனா, கொரியா!