கரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், சில மாநிலங்களில் ஊரடங்கு காலத்தை மேலும் நீட்டிக்க திட்டமிட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு 'மான் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.