முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 24ஆம் தேதி காலமானார். அப்போது பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் அருண் ஜேட்லி உடலுக்கு அவரால் மரியாதை செலுத்த முடியவில்லை.
அருண் ஜேட்லி குடும்பத்தினருக்கு மோடி ஆறுதல்! - Prime Minister Modi
டெல்லி: மறைந்த முன்னாள் மத்தியமைச்சர் அருண் ஜேட்லி வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.
Modi Expresses condolence to Arun Jaitley Family Members
இந்நிலையில், தன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அருண் ஜேட்லி வீட்டிற்கு மோடி சென்றபோது உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார். 2014 - 2019 ஆண்டு வரை பாஜக அமைச்சரவையில் முக்கியமான அமைச்சராகவும், மோடியின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர் அருண் ஜேட்லி.