நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை இன்று விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோர் தங்கள் வாழ்த்து செய்தியைப் பகிர்ந்துவருகின்றனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'வண்ணங்கள், மகிழ்ச்சியை கொண்டுவரும் ஹோலிப் பண்டிகையில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துசெய்தியை பகிர்ந்துகொள்கிறேன். இந்த ஹோலிப் பண்டிகை மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவர பிரார்த்திக்கிறேன்' எனத் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துசெய்தியில், சமூகத்தில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக ஹோலி பண்டிகை மகிழ்ச்சியை தரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.