தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.4,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடக்கி வைத்த பிரதமர்

குஜராஜ் மாநிலத்தில் ரூ. 4000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திடங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

By

Published : Oct 24, 2020, 1:13 PM IST

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

குஜராத் மாநிலத்தில் மூன்று முக்கிய நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.24) தொடக்கி வைத்தார். அம்மாநில விவசாயிகளின் பாசனத்திற்கு பகல் நேரத்தில் மின்விநியோகம் வழங்கும் கிசான் சூர்யோதயா திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், அம்மாநில விவசாயிகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தடையில்லா மின்சாரம் பெறுவார்கள். இந்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் 3 ஆயிரத்து 500 கோடியாகும்.

அடுத்ததாக, நாட்டிலேயே மிகப்பெரிய இருதய சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை அகமதாபாத் நகரில் தொடக்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையாக இது திகழும் என பெருமிதம் கூறினார்.

மேலும், நாட்டின் முக்கிய சுற்றுலாத் தளமான கிர்னார் மலைப்பகுதியில் ரோப் வே திட்டத்தை மோடி தொடக்கி வைத்தார். 2.3 கி.மீ நீளம் கொண்ட இந்த சுற்றுதலாத் தளத்திற்கு ஆண்டுதோறும் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இதையும் படிங்க:பிகார் தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம்!

ABOUT THE AUTHOR

...view details