2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புக் காவலர்கள் உள்பட ஒன்பது பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதல் நடத்தியதில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
அதன் நினைவுநாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இன்றும் அந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் கருத்திட்டுள்ளார்.
அதில், "2001ஆம் ஆண்டு எங்கள் நாடாளுமன்றத்தின் மீது கோழைத்தனமாகத் தாக்குதல் நடத்தியதை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். எங்கள் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க உயிரிழந்தவர்களின் வீரம், தியாகத்தை நினைவுகூருவோம். அவர்களுக்கு நாடு எப்போது நன்றி செலுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டரில், "பாரதத் தாயின் வீரப்புதல்வர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது எதிரிகளின் கோழைத்தனமான தாக்குதலில் அவர்கள் (வீரர்கள்) தங்களது உச்சபட்சமான உயிரைத் துச்சமெனத் துறந்தனர்.
உங்களது (வீர மரணமடைந்தோர்) உயர் தியாகத்தை நமது பெருமைமிக்க நாடு ஒருபோதும் மறவாது" எனப் பதிவிட்டுள்ளார்.