கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று (ஆக. 28) மாலை உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் இறப்பு செய்தி கேட்டு வேதனை அடைகிறேன்.
வசந்தகுமாரின் சமூக செயல்பாடுகள் மதிக்கத்தக்கவை - மோடி புகழ் அஞ்சலி - PM Modi
டெல்லி : தொழில் முன்னேற்றத்திற்காகவும் சமூக செயல்பாடுகளுக்காகவும் வசந்தகுமார் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் மதிக்கத்தக்கவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி
தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமூக செயல்பாடுகளுக்காகவும் வசந்தகுமார் மேற்கொண்ட முயற்சிகள் மதிக்கத்தக்கவை. அவருடன் உரையாடல் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் வசந்த குமார் கொண்ட ஆர்வம் வெளிப்பட்டது. அவரின் குடும்பத்தாருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்வை தள்ளிவைத்தால் கல்வியாண்டு பாதிக்கும் - மத்திய கல்வித்துறை அமைச்சர்