கடந்த ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 நாளை அதிகாலை 1 மணியிலிருந்து 2 மணிக்குள் நிலவில் தரையிறங்கவுள்ளது.
'சந்திரயான்-2யைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்'- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் - சந்திரயான்-2, மோடி ட்வீட், பிரதமர் ட்வீட்
டெல்லி : சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டதிலிருந்து, அதை கவனித்து வருகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
pm-modi-tweet
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டதிலிருந்து அது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தவறாமல் ஆர்வத்துடன் கண்காணித்து வருகிறேன். இந்த மிஷன் இந்தியாவின் மிகச்சிறந்த ஊக்கத்தையும் திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.
இதன் வெற்றி கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் பயனளிக்கும். 130 கோடி இந்தியர்களும் அத்தருணத்திற்காக ஆர்வத்துடன் இங்கே காத்துக்கொண்டிருக்கிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.