தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திலகரின் விருப்பமே எனது விருப்பம் - பிரதமர் மோடி - சுதந்திரம் எனது பிறப்புரிமை

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள லோக்மான்யா சேவா சங்கத்துக்கு சென்ற மோடி, அங்குள்ள வருகையாளர் புத்தகத்தில் 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என திலகரின் வாசகத்தை குறிப்பிட்டுள்ளார்.

Modi

By

Published : Sep 7, 2019, 5:59 PM IST

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பால கங்காதர திலகரின் கொள்கையாளர்கள் கட்டிய 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த லோக்மான்யா சேவா சங்கத்துக்கு சென்ற மோடி அங்குள்ள விநாயகரை வணங்கினார்.

பின்னர், அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில், "திலகரின் கருத்துகளை வாழ்க்கையின் தத்துவமாக ஏற்றுக்கொண்வர்களை நான் வரவேற்கிறேன். சுதந்திரம் எனது பிறப்புரிமை. இன்றைய இந்தியாவில், இந்த தத்துவம் அனைவரையும் ஊக்கப்படுத்தும். அதுதான் எனது விருப்பம்" என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

மகாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரி, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மோடியுடன் லோக்மான்யா சேவா சங்கத்துக்கு சென்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, மும்பை, அவுரங்காபாத் ஆகிய பகுதிகளில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொள்ள உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details