தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உ.பி. செல்லும் பிரதமர்!

By

Published : Feb 29, 2020, 11:43 AM IST

லக்னோ: பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசம் செல்கிறார்.

modi
modi

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்க உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதிக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு, டெல்லி - உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கிடையேயான பந்தல்கண்ட் விரைவுச் சாலைத் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

அதன் பின்னர், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் தொகைத் திட்டத்தின் முதலாமாண்டு விழா சித்தரகூட் பகுதியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மோடி விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். பின்னர், அவர் பிரயாக்ராஜ் நகருக்குச் சென்று, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

நல உதவித்திட்டங்களை வழங்க உ.பி செல்கிறார் மோடி

பிரதமரின் வருகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உச்ச பட்ச கண்காணிப்பில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், டெல்லி வன்முறை, இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே பிரதமரின் வருகைக்காக ஆறு ஐபிஎஸ் அலுவலர்கள், 12 ஏஎஸ்பி அலுவலர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:காங்கிரஸ் அரசை கவிழ்க்க மத்திய அரசு சதி - முதலமைச்சர் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details