தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கு தளர்வு: முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: ஊரடங்கு தளர்வு 1.0 குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 16,17 ஆகிய தேதிகளில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஊரடங்கு தளர்வு: முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஊரடங்கு தளர்வு: முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

By

Published : Jun 12, 2020, 10:11 PM IST

Updated : Jun 12, 2020, 10:32 PM IST

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல தளர்வுகளுடன் ஐந்தாவது முறையாக ஜுன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து பிரதமர் மோடி காணொலி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பல முறை ஆலோசனை மேற்கொண்டு பல முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஊரடங்கு காலம் முடியும் தருவாயில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும், அந்தந்த மாநிலத்தில் நிலவிவரும் கரோனா சூழல் குறித்தும், மாநிலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் கேட்றிந்துவந்தார்.

ஊரடங்கு தளர்வு: முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 16,17 ஆகிய தேதிகளில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதில், ஊரடங்கில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டம் இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜுன் 17ஆம் தேதி கலந்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Last Updated : Jun 12, 2020, 10:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details