சமணத் துறவி ஸ்ரீ விஜய் வல்லப் சூரிஸ்வர் ஜி மகாராஜின் 151ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் பாலி நகரில் நிறுவப்பட்டுள்ள அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி இன்று மதியம் திறந்து வைக்கவுள்ளார்.
12 அடி உயரம் கொண்ட இந்த சிலை 8 வகையான உலோகங்களால் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இதில் பெருமளவு செம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, " இன்று மதியம் அமைதிக்கானச் சிலையை திறந்து வைக்கிறேன். அனைவரும் நிகழ்ச்சியை காண வேண்டும்" என தெரிவித்துள்ளார்.