15ஆவது இந்திய-ஐரோப்பா உச்சி மாநாடு இன்று (ஜூலை 15) நடைபெறுகிறது. இதில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கிறார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, “இந்த உச்சி மாநாடு ஐரோப்பாவுடனான நமது பொருளாதாரம், கலாசாரத்தைப் பலப்படுத்தும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி! - இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: இன்று நடைபெறும் இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றும் பிரதமர் மோடி!
மாநாட்டில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளார். முன்னதாக, உச்சி மாநாட்டிற்காக மார்ச் மாதமே பிரஸ்ஸலிற்குச் செல்லவிருந்தார். ஆனால், அது கரோனா பரவல் காரணமாக தடைப்பட்டது. 14ஆவது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு 2017ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி அன்று டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...ஒரு கிலோ மீட்டர் நடந்து மருத்துவமனைக்குச் சென்ற கரோனா நோயாளி!