தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்விட்டருக்கு டாட்டா காட்ட மோடி முடிவு? - மோடி பேஸ்புக்

டெல்லி : சமூக வலைதளத்தில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

modi social media
modi social media

By

Published : Mar 2, 2020, 10:53 PM IST

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சமூக வலைதள கணக்குகளில் இருந்து தான் வெளியேற திட்டமிட்டுள்ளதாக, அவர் தற்போது அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி,"பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் என அனைத்து சமுக வலைதளங்களில் இருந்தும் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியேறலாம் என திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் இந்த அறிவிப்பு, அவரின் சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடரும் நபர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் ட்விட்டரை 5.33 கோடி பேரும், பேஸ்புக்கில் 4.4 கோடி பேரும், இஸ்டாகிராமில் 3.5 கோடி பேரும் பின்தொடருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெல்லி கலவரம் மத்திய அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலை - மம்தா பானர்ஜி

ABOUT THE AUTHOR

...view details